ரோந்து வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியது இன்ஸ்பெக்டர் படுகாயம்


ரோந்து வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியது இன்ஸ்பெக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Dec 2018 3:00 AM IST (Updated: 22 Dec 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

மணலி விரைவு சாலையில் ரோந்து வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

திருவொற்றியூர்,

மணலி அருகே உள்ள சாத்தாங்காடு போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் (வயது 45) நேற்று முன்தினம் இரவு ஜீப்பில் ரோந்து சென்றுவிட்டு அதிகாலை 2 மணியளவில் மணலி விரைவு சாலையில் ஆமுல்லைவாயில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, போலீஸ் வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது பக்கவாட்டில் மோதியது.

இதில் ரோந்து வாகனம் நிலைதடுமாறி சாலையில் நின்று கொண்டு இருந்த மற்றொரு வாகனத்தில் மோதி நின்றது. இதில் போலீஸ் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபிநாத், டிரைவர் சதீஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் நாகராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story