மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கியவர் உள்பட 4 பேராசிரியர்கள் பணிநீக்கம்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கியவர் உள்பட 4 பேராசிரியர்கள் பணிநீக்கம்
x
தினத்தந்தி 21 Dec 2018 9:45 PM GMT (Updated: 21 Dec 2018 7:43 PM GMT)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கியவர் உள்பட 4 பேராசிரியர்களை பணிநீக்கம் செய்து ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் அதிரடியாக முடிவு செய்யப்பட்டது.

நெல்லை, 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கியவர் உள்பட 4 பேராசிரியர்களை பணிநீக்கம் செய்து ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் அதிரடியாக முடிவு செய்யப்பட்டது.

பாலியல் புகார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் நடந்த ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதுபற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்பியல் துறை பேராசிரியர் கோவிந்தராஜூ மீது பாலியல் புகார் எழுந்தது. அவர் ஒரு ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தினோம். அந்த குழுவின் அறிக்கை ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோவிந்தராஜூவுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது அவரை பணிநீக்கம் செய்து ஆட்சிமன்ற குழு உத்தரவிட்டு உள்ளது.

பணிநீக்கம்

அதேபோல் ஆங்கில துறையை சேர்ந்த ஜெனிதா, பூவலிங்கம், ரமேஷ் ஆகியோர் மீது ஆசிரியர் பணியை சரிவர செய்யவில்லை என புகார் வந்தது. இதுபற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தமது அறிக்கையை ஆட்சிமன்ற குழுவில் சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் அந்த 3 பேராசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் 4 பேராசிரியர்களை பணிநீக்கம் செய்து ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story