பெண் போலீசை முத்தமிட்ட வழக்கில் தேடப்படும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், பெண்ணுடன் ராஜபாளையத்துக்கு ஓட்டம்?
பெண் போலீசை முத்தமிட்ட வழக்கில் தேடப்படும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு பழக்கமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் ராஜபாளையம் விரைகிறார்கள்.
திருச்சி,
திருச்சி அருகே சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ந்தேதி இரவு, அங்கு பணியில் இருந்த 32 வயது பெண் போலீசை, அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் (வயது 54) அணைத்து முத்தமிட்டார். இது தொடர்பாக பெண் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில், பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.
போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தமிட்ட காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அது வாட்ஸ்அப் மற்றும் வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி, சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் விசாரித்த விவரம் ஆகியவற்றை அறிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் 3 பிரிவுகளின்கீழ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண் போலீசிடமும் அன்றைய தினம் நடந்தது என்ன? என்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுவதை அறிந்த பாலசுப்பிரமணியன் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக வக்கீல் ஒருவர் மூலம் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உய்யகொண்டான் திருமலை அருகே உள்ள கொடாப்பு ஆகும். அவருக்கு மனைவி, மகள், மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரைச்சேர்ந்த திருமணம் ஆன 37 வயது பெண்ணுடன் பாலசுப்பிரமணியனுக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக அந்த பெண்ணையும் காணவில்லையாம். உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பாலசுப்பிரமணியன் தனது தோழியையும் தன்னுடன் அழைத்து சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் போலீசார் விசாரித்துள்ளனர். தற்போது பாலசுப்பிரமணியன் அந்த பெண்ணுடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சோமரசம்பேட்டை போலீசார் ராஜபாளையம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story