மாமல்லபுரம் அருகே விபத்துகளை தடுக்க தானியங்கி சிக்னல் போலீசார் நடவடிக்கை


மாமல்லபுரம் அருகே விபத்துகளை தடுக்க தானியங்கி சிக்னல் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2018 3:30 AM IST (Updated: 22 Dec 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

விபத்துகளை குறைக்க தானியங்கி சிக்னல் அமைக்க மாமல்லபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் கிழக்கு கடற்கரை சாலை திருப்போரூருக்கு செல்லும் வலதுபக்க சாலையில் வாகனங்கள் திரும்பும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் நடந்தன. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில் இந்த பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்கள் நின்று செல்லவும், விபத்துகளை குறைக்கவும் தானியங்கி சிக்னல் அமைக்க மாமல்லபுரம் போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி கிழக்கு கடற்கரை சாலை பேரூர் பகுதியில் தானியங்கி சிக்னலை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் முன்னிலையில் மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்புராஜ் இதனை தொடங்கி வைத்தார். அந்த பகுதியில் கடக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையில் வேக குறைப்பு தடுப்பு பலகைகளும் அமைக்கப்பட்டன.

Next Story