நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்,
தலைஞாயிறில் ஆயுதப்படை போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, நாகை புதிய பஸ் நிலையம் அருகே சிவசேனா கட்சி, சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை ஆகியவை இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிவசேனா கட்சியின் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சமத்துவ மக்கள் கழக நாகை, காரைக்கால் மாவட்ட தலைவர் கராத்தே விஜி, நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் தங்க.முத்துக்கிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் குமார், துணை தலைவர் சுப்பு உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சிவசேனா, சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவையை சேர்ந்த ஏராளமனோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story