வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் பணப்பரிவர்த்தனை முடங்கியது


வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் பணப்பரிவர்த்தனை முடங்கியது
x
தினத்தந்தி 21 Dec 2018 11:30 PM GMT (Updated: 21 Dec 2018 10:26 PM GMT)

மும்பையில் நேற்று வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணப்பரிவர்த்தனை முடங்கியது.

மும்பை, 

மும்பையில் நேற்று வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணப்பரிவர்த்தனை முடங்கியது. வங்கி சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வேலைநிறுத்தம்

மத்திய அரசு அதிகாரிகளுக்கு இணையாக வங்கி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறிய வங்கிகளை இணைக்கக்கூடாது என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடந்தது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மும்பையிலும் வங்கி மேலாளர்கள், உதவி மேலாளர்கள் உள்பட அதிகாரிகள் நேற்று பணிக்கு வரவில்லை.

சேவைகள் முடங்கியது

பெரும்பாலான வங்கிகளில் ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. இதனால் மும்பையில் பல வங்கிகள் மூடியே கிடந்தன. இதனால் வங்கி சேவைகள் நேற்று முற்றிலும் முடங்கின. சில வங்கிகள் முன்பு போராட்டம் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

வங்கி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story