கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 21 Dec 2018 11:30 PM GMT (Updated: 21 Dec 2018 10:57 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடந்த விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பாகுபாடின்றி முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 27 வகையான நிவாரண பொருட்களை குடும்ப அட்டையை அடிப்படையாக கொண்டு அனைவருக்கும் வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்கிக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் மீது போலீசார் வழக்கு போடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் நியாயமான கோரிக்கையினை முன் வைத்து போராடும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து அச்சுறுத்தி வரும் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து தீவிரமாக போராட்டம் நடத்துவது. வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி திருவாரூரில் சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்ட துணை தலைவர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story