முண்டியம்பாக்கத்தில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கு


முண்டியம்பாக்கத்தில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கு
x
தினத்தந்தி 23 Dec 2018 4:00 AM IST (Updated: 22 Dec 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

முண்டியம்பாக்கத்தில் பெண் குழந்தைகளை காப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெமினி, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி வரவேற்றார். கருத்தரங்கை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இதன் பின்னர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை குழந்தையின் தாயிடம் வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் சங்கரநாராயணன், டாக்டர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், விழுப்புரம் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவகுரு மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள், களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் நிவாஸ் நன்றி கூறினார்.

Next Story