வளசரவாக்கத்தில் 1,270 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
வளசரவாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் 1,270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி,
குற்ற சம்பவங்களை தடுக்க சென்னை பெருநகர போலீசார் சார்பில் ‘மூன்றாவது கண்’ எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் 1,270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றியும், ‘ரிமோட்’ மூலமும் கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இணை கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் அரவிந்தன், உதவி கமிஷனர் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story