தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கலெக்டரிடம் பெற்றோர் சங்கம் புகார்


தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கலெக்டரிடம் பெற்றோர் சங்கம் புகார்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:00 PM GMT (Updated: 22 Dec 2018 8:40 PM GMT)

தெருநாய்களை அப்புறப்படுத்தக் கோரி கலெக்டரிடம் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க தலைவர் வின்சென்ட், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கேசவனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் காமராஜர் சாலை, வள்ளலார் நகர், அரசு மருத்துவமனை பகுதி, மார்க்கெட் வீதி, திருநள்ளார் வீதி, பாரதியார் வீதி, கலெக்டர் அலுவலகம் எதிரே டாக்டர் அம்பேத்கர் வீதி, நேரு வீதி ஆகிய இடங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

பொதுமக்களையும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளையும், தெருநாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. சாலைகளில் திரியும் ஆடு, மாடுகளையும், கோழிகளையும் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன. காரைக்கால் அரசு மருத்துவமனையில் தினமும் 5-க்கும் மேற்பட்டவர்கள் தெருநாய்கடிக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். இதில் வெளியூர் வாசிகள் என்றால் சிகிச்சை அளிப்பது கிடையாது. அவர்கள் தங்களது சொந்த ஊருக்குத்தான் செல்லவேண்டும். அல்லது தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சி மற்றும் சிறப்பு ஊழியர்களை நியமித்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story