மத்திய அரசு சார்பில் ரூ. 40 லட்சம் மானியம் விசைப்படகு வாங்க மீனவர்களுக்கு உதவ வேண்டும் அரசுக்கு தி.மு.க. வேண்டுகோள்
விசைப்படகு வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.40 லட்சத்தை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் வேண்டுகோள் விடுத்தாார்.
காரைக்கால்,
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளருமான நாஜிம் நிருபர்களிடம் கூறியதாவது:-
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்தும் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் அந்த படகுகள் விடுவிக்கப்பட்டன. இதில் காரைக்கால் மீனவர்களுக்கு சொந்தமான 7 படகுகள் வந்தன. இந்த படகுகள் மிகவும் பழுதடைந்துள்ளன.
எனவே இந்த படகுகளை சீரமைக்க காரைக்கால் மீனவர்களுக்கு மானியத்துடன் ரூ.10 லட்சம் வங்கிக் கடன் கிடைக்க புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரூ.40 லட்சம் மானியம்
மீன்பிடி விசைப்படகுகள் வாங்க மீனவர்களுக்கு மத்திய அரசு ரூ.40 லட்சம் மானியமாக வழங்கி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மீனவர்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். காரைக்கால் மாவட்ட மீனவர்களுக்கும் இந்த மானியம் கிடைக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story