கோவிலில் திருடிய வாலிபர் கைது


கோவிலில் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 22 Dec 2018 8:46 PM GMT)

நெட்டப்பாக்கம் அருகே கோவிலில் புகுந்து செம்புக் கம்பிகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர், 

நெட்டப்பாக்கம் அருகே செம்படபேட் பகுதியில் புதிதாக அங்காளம்மன் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு புதிதாக அம்மன் சிலை வடிவமைப்பதற்காக செம்புக் கம்பிகளை வாங்கி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த அறையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செம்புக் கம்பிகளை திருடிச் சென்றுவிட்டனர்.

கைது

இதுகுறித்து கோவில் நிர்வாகி செந்தில்நாதன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் செம்புக் கம்பிகளை திருடியது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 30) என்பது தெரிய வந்தது. விசாரணையைத் தொடர்ந்து வாலிபர் கலியமூர்த்தியை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

Next Story