பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்தது 1-ந் தேதி வரை விடுமுறை
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து வருகிற 1-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 10-ந் தேதி தொடங்கியது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த 11-ந் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்றது. இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 5 வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கும் தேர்வு நடந்தது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலையிலும், மதியம் 9-ம் வகுப்புக்கும் தேர்வு நடந்தது. இதில் 6 மற்றும் 8-ம் வகுப்பு பயில்வோர்க்கு காலையிலும், 7-ம் வகுப்பு பயில்வோருக்கு மதியமும் தேர்வு நடந்தது. நேற்றுடன் அனைத்து வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நேற்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்ததால், கடைசி தேர்வு எழுதி விட்டு தேர்வு அறைகளில் இருந்து வெளியே வந்த மாணவ- மாணவிகள் உற்சாகமாய் துள்ளிக்குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள 10 நாட்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகையை தவிர்த்து மீதமுள்ள நாட்கள் அனைத்தும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதால், அந்த வகுப்புகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் புலம்பியவாறு வீடுகளுக்கு சென்றதையும் காணமுடிந்தது. ஆனால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகள் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து உற்சாகமடைந்தனர். இதில் சிலர் தங்களது நண்பர்களை விட்டு 10 நாட்கள் பிரிந்து இருக்கப்போகிறோம் என்று சற்று கவலையுடன் வீடு திரும்பினர்.

Related Tags :
Next Story