பாரடைஸ் பீச்சில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை


பாரடைஸ் பீச்சில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 24 Dec 2018 3:17 AM IST (Updated: 24 Dec 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி டிசம்பர் 31-ந் தேதி இரவு நோணாங்குப்பம் படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சுக்கு படகு சவாரி இயக்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் படகு குழாமில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சுற்றுலாத்துறை மேலாண் இயக்குனர் முருகேசன் தலைமை தாங்கினார். தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், இரவு 11 மணிக்கு மேல் படகுகள் இயக்கக்கூடாது, தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மீட்பு பணியில் வீரர்கள் தயார் நிலையில் இருப்பது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தபின் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், படகு குழாம் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story