நிவாரண பெட்டகம் வழங்குவதில் முறைகேட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
திருவாரூர் அருகே நிவாரண பெட்டகம் வழங்குவதில் முறைகேட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல நிவாரண தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள குளிக்கரை, பெருந்தரக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண பெட்டகம் வழங்குவதில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்-மன்னார்குடி சாலையில் மேப்பலம் என்ற இடத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பெட்டகம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் குணசீலி, கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அனைவருக்கும் நிவாரண பெட்டகம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாருக்கு ஆளான கிராம நிர்வாக அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தாசில்தார் உறுதி அளித்தார்.
அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருவாரூர்-மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் 27 நிவாரண பொருட்களை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று விளக்குடி கடைத்தெருவில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இதனால் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் நின்றன.

Related Tags :
Next Story