ஓட்டேரியில் ஊதிய உயர்வு கோரி மாடுகள் பராமரிக்கும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டேரியில் மாடுகள் பராமரிக்கும் பணியாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
திரு.வி.க. நகர்,
சென்னை ஓட்டேரியில் கடந்த 1906-ம் ஆண்டு ஒரு தனியார் அமைப்பு சார்பில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் மாடுகள் பராமரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இங்கு 2,500-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இவற்றை பராமரிக்க 65 பெண்கள் உள்பட 167 பேர் பணியில் உள்ளனர். இதில் 23 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் இங்கேயே தங்கி பராமரிப்பு வேலைகளை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அடிப்படை வசதிகள் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாடுகள் பராமரிக்கும் பணியாளர்கள் நேற்று காலை 5 மணி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய கமிட்டி அமைத்து அதன் மூலம் தீர்வு காணப்படும் என மாடுகள் பராமரிப்பு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மாடுகளுக்கு தீவனம் வைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
மாடுகள் பராமரிப்பு நிறுவனத்தினருடன் இணைந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டேரி போலீசார் மாடுகளுக்கு தீவனம் வைத்தனர்.
Related Tags :
Next Story