மீன்பிடிக்க சென்றவர்கள் ஆற்றில் மூழ்கினர்; ஒருவர் பலி பிளஸ்-1 மாணவரின் கதி என்ன?
புதுவை சுண்ணாம்பாற்றில் மீன் பிடிக்க சென்ற 2 பேர் தண்ணீரில் மூழ்கினர். இதில் ஒருவர் பலியானார். பிளஸ்-1 மாணவரின் உடலை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
பாகூர்,
புதுவை மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது50). பெயிண்டர். இவருடைய அண்ணன் பரதனின் மகன் மணிகண்டன் (17) இந்திராநகர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு 7 மணி அளவில் சுண்ணாம்பாற்றில் அங்காளம்மன் கோவில் எதிரில் தூண்டில் வலை கட்டி மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் இருவரும் சிக்கினர். இதனால் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி அலறினர். சத்தம் கேட்டு அந்த பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தநிலையில் இரவு 10 மணி அளவில் கேசவனின் உடலை மீட்டு கதிர் காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனை தேடும் பணி நடந்தது. ஆனால் இருட்டாகி விட்டதால் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த மாணவரின் கதி என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Related Tags :
Next Story