நினைவு தினத்தையொட்டி பெரியார்-எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை


நினைவு தினத்தையொட்டி பெரியார்-எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 25 Dec 2018 3:51 AM IST (Updated: 25 Dec 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

பெரியார், எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி,

பெரியார், எம்.ஜி.ஆரின் நினைவு தினம் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலை, பிள்ளைத்தோட்டத்தில் உள்ள பெரியார் சிலை ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.வினர் உப்பளம் தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் எம்.ஜி.ஆர்., பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நடராஜன், ராஜாராமன், துணை செயலாளர்கள் கணேசன், நாகமணி, நகர செயலாளர் அன்பானந்தம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுப்ரமணியன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மீனவர் அணி ஞானவேல், சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்துவான் சூசை, தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், கலியபெருமாள், பொன்னுசாமி, ஜானிபாய் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இணை செயலாளர்கள் காசிநாதன், திருநாவுக்கரசு, ராமதாஸ், துணை செயலாளர்கள் வெங்கடசாமி, பெரியசாமி, கணேசன், கோவிந்தம்மாள், ஊசுடு செல்வராஜ், மாசிலாகுப்புசாமி, மகளிர் அணி விஜயலட்சுமி, வக்கீல்கள் அணி குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தெற்கு மாநில தி.மு.க.வினர் அவைத்தலைவர் சீத்தாவேதநாயகம் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள். வடக்கு மாநில தி.மு.க.வினர் பொருளாளர் செந்தில்குமார் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சரவணன், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அண்ணா சிலையில் இருந்து மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளரும், கடலூர் கிழக்கு மாவட்ட அவை தலைவருமான அருள், புதுவை மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைத்தலைவர் பாண்டுரங்கன், இணை செயலாளர் யூ.சி.ஆறுமுகம், துணை செயலாளர்கள் சுப்ரமணியன், பிரபுதாஸ், தவமுருகன், அன்பு, தமிழரசி, பொருளாளர் இரிசப்பன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தமிழ்மாறன், அண்ண தொழிற்சங்க பேரவை செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையிலும், திராவிடர் கழகத்தினர் தலைவர் சிவ.வீரமணி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Next Story