ராசிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிதோண்ட வெடி வைத்தபோது வீடுகளில் விரிசல் - பொதுமக்கள் பீதி
ராசிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிதோண்ட வெடிவைத்தபோது வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் நகராட்சி பகுதியில் கடந்த 2½ ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ரோடுகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. தற்போது 83 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளதாக பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்தக்காரர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் திட்டம் எப்போது முழுவதும் நிறைவடையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் ராசிபுரம் வி.நகர் ரோடு எண்-4 பகுதியில் உள்ள கருப்பணார் கோவில் அருகில் உள்ள தெருவில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இந்த பகுதி முழுவதும் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றன.
நேற்று காலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பணியாளர்கள் குழிகளை தோண்டிக் கொண்டிருந்தனர். குழியில் பாறை இருந்ததால் அதில் வெடிவைத்து கற்களை எடுக்க முயற்சி எடுத்துள்ளனர். அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்ததில் அருகில் இருந்த அன்பழகன், தங்கவேலு, தங்கம்மாள் உள்பட பலரது வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டத்திற்காக வெடி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் குழி மூடப்பட்டது.
இன்னும் ஒரு வெடி குழிக்குள் இருப்பதால் அந்த குழியை மண்ணை போட்டு மூடி உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் வெடி வெடித்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், அப்போது வீட்டில் இருந்த வர்கள் அச்சம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.
வீடுகள் நிறைந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழிகள் தோண்டும்போது வெடிவைப் பதை தவிர்க்க வேண்டும் எனவும், வெடிவைக்கும்போது சம்பந்தப்பட்ட குழியின் மேற்பகுதியை பாதுகாப்பு கருதி மூடி கற்கள் மேலே பறந்து வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வெடி வெடித்தபோது சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

Related Tags :
Next Story