சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் அனுசரிப்பு


சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 4:00 AM IST (Updated: 26 Dec 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் அனுசரித்தனர். சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவுதினத்தையொட்டி தாரமங்கலத்தில் மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகில் முடிவடைந்தது. ஊர்வலத்திற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சின்னுசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் மாதேசன், ஏழுமலை, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர்கள் துரைராஜ், செங்கோடன், பழனிசாமி, மணிமுத்து, முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய பொருளாளர் மானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வல முடிவில் எம்.ஜி.ஆர். சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜா, வெற்றிவேல், மனோன்மணி, முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இடங்கணசாலையில் எம்.ஜி.ஆர். நினைவுதினத்தையொட்டி பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் இடங்கணசாலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவலிங்கம், பேரூர் அ.தி.மு.க. செயலாளர் அண்ணாமலை, கே.கே.நகர் முத்து மற்றும் வேடியப்பன், கந்தசாமி, ஏழுமலை, மகளிர் அணி வசந்தி, ரங்கநாதன், ராஜாங்கம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூரில் நடந்த எம்.ஜி.ஆர். நினைவு தின நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். இதில் சின்னதம்பி எம்.எல்.ஏ., ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரஞ்சித்குமார், அவைத்தலைவர் கலியன் மற்றும் தென்னரசு, நூர்முகமது, கதிரேசன், சேகர், சண்முகசுந்தரம், தியாகராஜன், முரளிசாமி, ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி ஒன்றிய அலுவலகம் அருகில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மெடிக்கல் ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவி, பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் மாதேஸ்வரன், வெங்கடாசலம், வேணுகோபால், நகர செயலாளர் பெரியசாமி, கூட்டாத்துப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன், வீட்டு வசதி கூட்டுறவு வங்கி தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட மகளிரணி செயலாளர் ராசாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story