தூத்துக்குடியில் மூலிகை செடிகள் கண்காட்சி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் மூலிகை செடிகள் கண்காட்சி  போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:30 AM IST (Updated: 26 Dec 2018 7:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மூலிகை செடிகள் கண்காட்சியை போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மூலிகை செடிகள் கண்காட்சியை போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா நேற்று தொடங்கி வைத்தார்.

மூலிகை கண்காட்சி

சித்தர்களில் தலைமை சித்தராக கருதப்படுபவர் அகத்தியர். அவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். அவரது பிறந்தநாள் தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மூலிகை செடிகள் கண்காட்சி, பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி, மகளிர் மருத்துவ கண்காட்சி ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான மூலிகை செடிகள், உணவு பொருட்கள் மற்றும் யோகா குறித்த விளக்கப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

கண்காட்சிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி தலைமை தாங்கினார். உதவி உறைவிட மருத்துவர் ஜெயபாண்டியன், ஒட்டநத்தம் வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமும் பார்த்து சென்றனர்.

கருத்தரங்கம்

தொடர்ந்து சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் அரசு ஆஸ்பத்திரி கூட்ட அரங்கில் நடந்தது. சித்த மருத்துவர்கள் மாரியப்பன், ஸ்ரீதேவி, ரதிசெல்வம், சேவியர் மைக்கேல்ராஜ் ஆகியோர் மன அழுத்தத்தை போக்குவது எப்படி, மகளிர் மருத்துவம், குழந்தைகளுக்கான சித்த மருத்துவம் குறித்து விளக்கி பேசினர். முடிவில் சித்த மருத்துவர் ரவீந்திரன் நன்றி கூறினார்.


Next Story