பொதுமக்களிடம் சித்த மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் ஆசியா மரியம் பேச்சு
பொதுமக்களிடம் சித்த மருத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
நாமக்கல்,
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சித்த மருத்துவ தின விழாவை முன்னிட்டு இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த முகாமுக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
சித்த மருத்துவம் என்பது நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம் ஆகும். காலபோக்கில் நாம் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை இழந்து விட்டோம். ஆனால் தற்போது சித்த மருத்துவத்தின் சிறப்புகளை மக்கள் அறிய தொடங்கி உள்ளனர். இதனால் தமிழக அரசும் கர்ப்பிணிகளுக்கு சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கி வருகிறது. இன்னும் சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது. உணவே மருந்து என்ற அடிப்படையில் தான் சித்த மருத்துவம் அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பொது மருத்துவம், வர்ம சிகிச்சை, முத்திரை சிகிச்சை, மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வாழ்வியல் முறை சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. இதையொட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட மூலிகைகள் கொண்ட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். 4 சிறுவர், சிறுமிகள் சித்தர்கள் போல வேடம் அணிந்து இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் உஷா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சித்த மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி வரவேற்று பேசினார். முடிவில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி உதவி மருத்துவ அலுவலர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
முன்னதாக காலையில் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலம் திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் மண்டபத்தை வந்தடைந்தது.

Related Tags :
Next Story