பனவடலிசத்திரம் அருகே கார் மோதி போலீஸ்காரர் பலி கோவிலுக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம்
பனவடலிசத்திரம் அருகே கோவிலுக்கு பாதயாத்திரை சென்றபோது கார் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக பலியானார்.
பனவடலிசத்திரம்,
பனவடலிசத்திரம் அருகே கோவிலுக்கு பாதயாத்திரை சென்றபோது கார் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக பலியானார்.
போலீஸ்காரர்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 45). ராஜபாளையத்தில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார்.
இதையடுத்து பேச்சிமுத்து அந்த பகுதியில் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்த சக பக்தர்களுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டார். அவர்கள் நேற்று முன்தினம் மாலை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வந்தனர். அங்கு சமையல் செய்து சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணியளவில் பனவடலிசத்திரத்தை அடுத்த தெற்கு பனவடலிசத்திரம் விலக்கு அருகே மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கார் மோதி சாவுஅப்போது அந்த வழியாக வந்த கார் பாதயாத்திரை சென்ற பேச்சிமுத்து மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ரோட்டில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடன் வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.