உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Dec 2018 3:30 AM IST (Updated: 27 Dec 2018 11:42 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குருபீடபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ஜெகதீசன் (வயது 28), தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய ஜெகதீசன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெகதீசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜெகதீசனின் தாய் அம்சவேணி எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசன் உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story