வில்லிவாக்கத்தில் குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான ரூ.40 கோடி நிலம் மீட்பு
வில்லிவாக்கத்தில் குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான ரூ.40 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள கக்கன்ஜி நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பின்புறம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான 5½ ஏக்கர் நிலம் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதில் 1,472 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணியில் கடந்த 2 நாட்களாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மொத்தம் உள்ள 1,472 பேரில் 1004 பேருக்கு அம்பத்தூர் அருகில் உள்ள அத்திப்பட்டிலும், மீதமுள்ளவர்களுக்கு பெரும்பாக்கத்திலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. இவர் கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று விட்டனர்.
பள்ளி குழந்தைகளுக்கும் புதிய குடியிருப்புகள் அருகே உள்ள அரசு பள்ளியில் இடம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஆதார்அட்டை, குடும்பஅட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்திலும் பெயர் மாற்றம் மற்றும் இடமாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதன் மூலம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான 5½ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ.40 கோடியாகும்.
ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத அளவுக்கு சுற்றிலும் சுவர் எழுப்பப்படும் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story