கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு கண்காட்சி அமைச்சர்கள் பார்வையிட்டனர்


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு கண்காட்சி அமைச்சர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 28 Dec 2018 4:15 AM IST (Updated: 28 Dec 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

சென்னை,

இந்த கண்காட்சியை அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு துணிப்பைகள் வழங்கியதுடன், பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது, “பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்களும், குறிப்பாக அரசு துறை அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “பிளாஸ்டிக் தடை வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்கூட்டியே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தமிழக அரசு முழுமையாக தடை அறிவித்த 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் முழுமையாக தடை செய்து பிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நிகழ்ச்சியில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story