நவீன கருவிகள் வரவால் நலிந்து வரும் கொல்லன் பட்டறை தொழில்
நவீன கருவிகள் வரவால் கொல்லன் பட்டறை தொழில் நலிந்து வருகிறது.
கரூர்,
நாகரிகத்தில் மூழ்கி கொண்டிருக்கும் நாம், பல்வேறு பணிகளை எந்திரங்களை கொண்டு விரைவாக செய்து முடிக்கிறோம். நாற்று நடுவது முதல் நெல்லை பிரித்து எடுப்பது வரை இன்று எந்திரங்கள் மூலமே மேற்கொள்ளப்படு கிறது.
முன்பெல்லாம் அரிவாள், கத்தி, மண்வெட்டி, கடப்பாரை, குந்தாளம், கலப்பை கூர்முனை, கோடரி, இரும்பு சங்கிலிகள், இரும்பு கரண்டிகள் போன்றவை கொல்லன் பட்டறையில் தயாரிக்கப்பட்டன. இரும்பை தீயில் நன்கு காய்ச்சி அதன் பெரிய சுத்தியலால் அடித்து தரமாக தயரிக்கப்பட்டன. அந்த பொருட்கள் நீண்ட காலம் உழைத்தன.
காலப்போக்கில் இரும்பு பொருட்களுக்கு மவுசு குறைந்து சில்வர், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த பொருட்கள் அழகாக கண்களை கவரும் வகையில் தயாரிக்கப்படுவதால் பொதுமக்களும் அவற்றை வாங்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பெல்லாம் இரும்பு கல்லில் தோசை ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். தற்போது தோசை தவா போன்றவை விற்பனைக்கு வந்து விட்டன.
இரும்பு பொருட்களுக்கு மவுசு குறைந்து போனாலும், கொல்லன் பட்டறை தொழில் இன்னும் ஓரிரு இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் குளித்தலை-மணப்பாறை மெயின் சாலை அருகே உள்ள வேதாசலபுரத்தில் கொல்லன் படடறை தொழிலாளர்கள் பரவலாக வசிக்கின்றனர்.
தோகைமலை பஸ் நிலையம் எதிரே வெட்டவெளியில் சிறியகூடாரம் அமைத்து முதியவர் ஒருவர் ஊது உலையின் மூலம் அடுப்புக்கரியில் தீ மூட்டி பழைய இரும்பு பொருட்களை காய்ச்சி கொண்டிருந்தார். பின்னர், பழுக்க காய்ச்சப்பட்ட இரும்பை எடுத்து அதனை பெரிய சுத்தியலால் அடித்து கூர்மைபடுத்தி தேவையான இரும்பு பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
தோகைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கடப்பாரை, மண்வெட்டி, குந்தாளம், கோடரி ஆகியவற்றை சீரமைப்பதற்காக இந்த கொல்லன் பட்டறையை நாடி வருகின்றனர். அதற்கு கூலியாக ரூ.50 முதல் ரூ.200 வரை பெறுகின்றனர். இந்த தொழிலில் குறைந்த அளவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதால் அந்த தொழில் நலிந்து வருகிறது.
இதுகுறித்து, கொல்லன் பட்டறை தொழிலில் ஈடுபட்டு வரும் வேதாசலபுரத்தை சேர்ந்த அண்ணன்-தம்பியான துரைராஜ் (வயது 68), மரியசூசை (60) ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் பரம்பரை பரம் பரையாக கொல்லன் பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். முன்புபோல, இந்த தொழிலில் வருமானம் இல்லை. சிறு, சிறு வேலை களைதான் செய்து கொடுத்து வருகிறோம். இந்த தொழில் நலிந்து வருகிறது. எங்களுக்கு பிறகு இந்த தொழிலில் அடுத்த தலைமுறையினர் ஈடுபடுவார்களா? என்பது சந்தேகமே. முன்பு மாட்டு வண்டிகளின் அச்சு, இரும்பு பட்டை உள்ளிட்டவை மற்றும் சில கருவிகளை செய்து கொடுத்தோம்.
தற்போது இரும்பு கருவிகளை செப்பனிடும் பணியை மட்டும் செய்கிறோம். குழி தோண்டுவது உள்ளிட்ட பணிகளுக்காகவும், கிணறு வெட்டுவதற்காகவும் முனை மழுங்கிய இரும்பு கருவிகளை பலர் கொண்டு வந்து சரி செய்து செல்கின்றனர். ஆகவே, நலிந்து வரும் கொல்லன் பட்டறை தொழிலை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நலிவடைந்த கொல்லன் பட்டறை தொழிலாளர் களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். தொழில் செய்ய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Related Tags :
Next Story