மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: பள்ளி மாணவன் பரிதாப சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: பள்ளி மாணவன் பரிதாப சாவு
x
தினத்தந்தி 29 Dec 2018 4:15 AM IST (Updated: 28 Dec 2018 7:29 PM IST)
t-max-icont-min-icon

கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள குண்டல்பட்டியை சேர்ந்தவர் மணி, தொழிலாளி. இவருடைய மகன் ஈஸ்வர்(வயது14). இவன் ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாணவன் உச்சம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றான்.

பின்னர் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தான். கம்பைநல்லூர்–இருமத்தூர் சாலையில் கொங்கரப்பட்டி பிரிவு ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவன் ஈஸ்வர் படுகாயம் அடைந்தான். உடனே அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் ஈஸ்வர் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story