இணைப்பு சாலை பணியை விரைவில் முடித்து திருவாரூர் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

இணைப்பு சாலை பணியை விரைவில் முடித்து திருவாரூர் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
வரலாற்று சிறப்பு மிக்க மனுநீதி சோழன் ஆட்சி புரிந்த திருவாரூர், சோழ மன்னர் காலத்தில் ஒரு முக்கிய நகரமாக திகழ்ந்தது. கடந்த 1981-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து திருவாரூர் மற்றும் நாகை நகரங்கள் பிரிக்கப்பட்டு நாகையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவானது. அதன் பின்னர் 1997-ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருவாரூர் தனி மாவட்டமானது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகியோர் பிறந்த ஊர் திருவாரூர் என்ற பெருமைமிக்கது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த தலமாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேர், குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளம் என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் திருவாரூருக்கு உண்டு. இங்கு தான் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
புகழ் பெற்ற புண்ணிய நகரமான வேளாங்கண்ணி, நாகூர், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் போன்ற சுற்றுலா தலங்கள் திருவாரூரை சுற்றி அமைந்துள்ளன. இதனால் தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் திருவாரூர் வழியாக செல்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஊரில் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்ட பஸ் நிலையம் மாவட்ட தலைநகராக மாற்றியும் இன்று வரை மாறாத தன்மையுடன் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெயர் பலகை கூட இல்லாத பஸ் நிலையமாக காட்சியளிக்கிறது. பனகல் சாலையும், தஞ்சை சாலையையும் இணைக்கின்ற பொது வழிபாதையில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை மார்க்கமாகவும், நகருக்குள் செல்லும் அனைத்து வாகனங்களும் பஸ் நிலையத்திற்குள் புகுந்து தான் செல்ல வேண்டும்.
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது வழக்கம். இங்கு 20 பஸ்கள் நிறுத்துவதற்கான வசதி மட்டுமே உள்ளதால் பல பஸ்கள் வழியில் நிறுத்தப் படுகின்றன. மேலும் இங்கு பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு ஓய்வு அறை வசதியும் இல்லை. ஆதலால் அடிப்படை வசதி இல்லாத பஸ் நிலையத்தினால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2011-ம் ஆண்டு திருவாரூர்-தஞ்சை சாலையில் விளமல் கல்பாலம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பில் 11.08 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இதனை தொடர்ந்து “பி” கிளாஸ் பஸ் நிலையமாக கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது. பின்னர் கூடுதலாக ரூ.5½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கின.
புதிய பஸ் நிலையத்தில் 40 பஸ்களை நிறுத்துவதற்கான வசதி உள்ளன. இங்கு 60 கடைகள், காவல் கண்காணிப்பு அறை, தொலைபேசி அறை, பொருள் பாதுகாப்பு அறை, ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே காத்திருப்போர் அறை மற்றும் உணவகம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன.
இந்த பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் நிறைவு அடைந்த நிலையில் தஞ்சை சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்வதற்கான இணைப்பு சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது.
இந்த பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. மேலும் கடைகள் அனைத்தும் டெண்டர் விடாமல் உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாக இந்த இணைப்பு சாலை பணியை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட தலைநகரமாக உள்ள திருவாரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Related Tags :
Next Story