எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதால் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாங்காட்டை சேர்ந்த 27 வயது பெண் புகார் அளித்தார். இந்த புகாரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் திட்ட வட்டமாக மறுத்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்களை எதிர்த்து மாதர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில உறுப்பினர் தனலட்சுமி கூறியதாவது:-
சென்னை மாங்காட்டில் உள்ள பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலைமை வேறு பெண்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. எனவே டாக்டர்களின் கவனக்குறைவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்.
எச்.ஐ.வி. பாதிப்பால் தனது உறவினர் மத்தியிலும், சமூகத்திலும் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார். எனவே அரசு தரப்பில் இருந்து ரூ.1 கோடி நிவாரணமும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ரத்தம் ஏற்றுவதற்கு முன்பு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்கவில்லை.
மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்த பரிசோதனை மாதத்துக்கு 1 முறை மட்டுமே நடைபெறுகிறது. இதனால் தான் அந்த பெண் தனியார் மருத்துவமனையில் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்த பரிசோதனை செய்துள்ளனர். மேலும் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல நவீன பரிசோதனைக்கான வசதிகள் இல்லை.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதற்கான வசதிகளை சுகாதாரத்துறை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் உரிய சிகிச்சை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் மாதர் சங்கம் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story