திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் மணிவண்ணன், வட்ட இணை செயலாளர் தருமையன், வட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் மதியழகன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வட்ட செயலாளர் ஜோதிபாஸ், வட்ட தலைவர் கீர்த்திவாசன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்ட பொருளாளர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசில் பணிபுரியும் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு 2017-18-ம் ஆண்டிற்கு சிறப்பு மிகை ஊதியமாக (பொங்கல் கருணைத்தொகை) ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 2017-18 -ம் ஆண்டிற்கு மிகை ஊதியமாக ஒரு மாத கால ஊதியத்தை உச்சவரம்பின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story