தேவதானம் அம்மையப்பன் கோவில் தெப்பம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்
தேவதானம் அம்மையப்பன் கோவில் தெப்பம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் தொகுதி தேவதானத்தில் அமைந்துள்ள அம்மையப்பன் கோவில் என்று அழைக்கக்கூடிய நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவில் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலின் தெப்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் 30 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தெப்பத்தை சீரமைக்க ஆய்வு மேற்கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையாளரிடம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் நேரில் சென்று வலியுறுத்தியதன் பேரில் தொல்லியல் துறையிலிருந்து ஆய்வு மேற்கொண்டு, மண்டலக் குழு அறிக்கை அளித்துள்ளது.
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெப்பம் மீண்டும் சரிந்து விழுந்துள்ளது என பக்தர்கள் கூறியதை தொடர்ந்து அதனை நேற்று எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பாண்டிய மன்னர்களது கோவில் எனவும், இந்த கோவிலின் தெப்பத்தை ரூ.2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உயர்நிலைக் குழு அறிக்கை அளித்தவுடன் பணி தொடங்கப்படும் என கூறினார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story