நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி தொடரும் : கர்நாடகத்தில் 12 தொகுதிகளில் போட்டி - ஜனதாதளம் (எஸ்) கட்சி தேசிய தலைவர் பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன.
பெங்களூரு,
முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். கர்நாடகத்தில் சமீபத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பா.ஜனதா வெற்றி பெற்றது. மற்ற 4 தொகுதிகளிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதனால் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இதுதொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவே கவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயன்றாலும், அது நடக்காது. 5 ஆண்டுகளையும் கூட்டணி ஆட்சி நிறைவு செய்யும். கூட்டணி ஆட்சி என்றால், சிறு,சிறு பிரச்சினைகள் வருவது சகஜம் தான். அதனை இரு கட்சிகளின் தலைவர்களும் பேசி தீர்த்துகொள்வார்கள். கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி தொடரும்.
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளில் போட்டியிட ஜனதாதளம்(எஸ்) கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் முடியும் என்று எதிர்பார்க்கிறேன். அதில் எவ்விதமான தடங்கலும், பிரச்சினைகளும் இருக்காது என்று நம்புகிறேன். அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதிக்குள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடியும் என்று கருதுகிறேன்.
ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 இடங்களில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச உள்ளேன். சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அந்த மாநிலங்களில் புதிய அரசு பதவியேற்பு, மந்திரிசபை விரிவாக்கம் ஆகியவற்றில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அதுபோல, நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 8-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்பிறகு, நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ராகுல்காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் தொகுதி பங்கீடு உள்ளிட்ட முடிவுகளை எடுத்து இறுதி செய்யப்படும். மாநிலத்தில் 28 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாகும். நாடாளுமன்ற தேர்தலில் மும்பை-கர்நாடகம், ஐதராபாத்-கர்நாடகம், பழைய மைசூரு பகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று நம்புகிறேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. அந்த தொகுதியில் எனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் விரும்பினார். சில காரணங்களால் போட்டியிட முடியாமல் போனது. தற்போது ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரஜ்வல் ரேவண்ணா தயாராகி வருகிறார். இதற்காக கடந்த 8 ஆண்டுகளாக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். ஹாசன் தொகுதி மக்கள் என் மீது அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். எனக்கும், அந்த தொகுதிக்கும் 58 ஆண்டுகால உறவு உள்ளது. எனக்கு வயதாகி விட்டதால், தேர்தலில் போட்டியிடுவேனா என்பது தெரியவில்லை. பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட வேண்டும் என்றே தொண்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும். வருகிற 3-ந் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். கூட்டத்தில் மந்திரிசபையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வசம் உள்ள 2 இடங்களை நிரப்புவது, வாரிய தலைவர்கள் நியமனம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்றும், 12 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story