சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் நடவடிக்கை பள்ளம் தோண்டி பாதை துண்டிப்பு
சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க பள்ளம் தோண்டி பாதையை போலீசார் துண்டித்தனர்.
திருக்கனூர்,
திருக்கனூர் அருகே சுத்துக்கேணி, குமராப்பாளையம், கைக்கிளப்பட்டு பகுதி வழியாக சங்கராபரணி ஆறு ஓடுகிறது. இங்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது.
இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இருப்பினும் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது.
இந்த நிலையில் சங்கரா பரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு, காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். சுத்துக்கேணி, கைக்கிளப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் செல்ல முடியாதபடி பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, பாதை துண்டிக்கப்பட்டது.
போலீசாரின் இந்த நடவடிக்கையால் திருக்கனூர் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story