செய்யாறு அருகே ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி திருத்தணிக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம்


செய்யாறு அருகே ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி திருத்தணிக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 31 Dec 2018 4:15 AM IST (Updated: 30 Dec 2018 8:27 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணிக்கு பாதயாத்திரையாக சென்றபோது 108 ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தேசூர் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 21), ராமசுப்பு என்பவரின் மகன் சுப்புராஜ் (25) மற்றும் நண்பர்கள் ஆகிய 4 பேர் திருத்தணி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்தவாசியில் இருந்து செய்யாறு அருகே காஞ்சீபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது செய்யாறு அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த சுப்புராஜை அதே 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அங்கிருந்து மற்றொரு 108 ஆம்புலன்சில் சுப்புராஜ் மற்றும் விபத்திற்குள்ளான ஆம்புலன்சில் இருந்த நோயாளியும் ஏற்றி கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெற்றிவேல் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story