அம்பத்தூரில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 27 பவுன் நகை-ரூ.2 லட்சம் திருட்டு
அம்பத்தூரில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 27 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் திருட்டு போனது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் கதிரேசன் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர், வீட்டின் படுக்கை அறையில் கட்டிலில் உள்ள சிறிய ‘லாக்கரில்’ 27 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தை வைத்து இருந்தார். பணத்தை எடுப்பதற்காக லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகை, பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை யாரோ திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி தனது வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டார். ஆனால் அவர்களுக்கு நகை, பணம் திருட்டுபோனது பற்றி தெரியவில்லை.
இது தொடர்பாக அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குமார் வீட்டில் தற்போது கூடுதல் அறை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் யாராவது, குமார் லாக்கரில் நகை, பணம் வைப்பதை நோட்டமிட்டு அதை திருடிச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story