மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Police strangle for a gang of 3 pound jewelry on a scooter

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈத்தாமொழி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈத்தாமொழி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் கேரளாவில் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி(வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

 ரேவதியின் ஒரு குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் ரேவதி, 2 குழந்தைகளுடன் தனது சகோதரியையும் அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்த பின் ரேவதி, அவர்களுடன் ஈத்தாமொழியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.


அவர்கள் வடக்குசூரங்குடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்து கொண்டிருந்தனர். திடீரென அந்த மர்ம நபர்கள் ரேவதியின் ஸ்கூட்டரை வழிமறித்தனர்.

பின்னால் இருந்த ஒருவர் ரேவதியை தாக்கி அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி, ‘திருடன்... திருடன்...’ என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச்சென்றனர். இதுகுறித்து ரேவதி ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அதியமான்கோட்டை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அதியமான்கோட்டை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. குருபரப்பள்ளி அருகே 3 வீடுகளில் ரூ.1.33 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குருபரப்பள்ளி அருகே 3 வீடுகளில் ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. வேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. திண்டிவனத்தில் துணிகரம் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை
திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. நகை, பணம் திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்த வாலிபர் தப்பி ஓட்டம்
ஆனைமலையில் நகை, பணம் திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்த வாலிபர் தப்பி ஓடினார்.