திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா


திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 31 Dec 2018 4:15 AM IST (Updated: 31 Dec 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே எழிலூரில் பாரபட்சமின்றி நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கவில்லை என கூறி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு வழங்கும் 27 நிவாரண பொருட்களை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எழிலூர் ஊராட்சி கூட்டுறவு சங்கம் அருகில் நிவாரண பொருட்கள் வைத்திருந்த அரசு கட்டிடம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story