மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் தாசில்தாரிடம் ஒப்படைப்பு + "||" + Congress handed over list of polling agents to Tashildar

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் தாசில்தாரிடம் ஒப்படைப்பு

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் தாசில்தாரிடம் ஒப்படைப்பு
காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் நேற்று தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொறையாறு,

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி முகவர்களை முன்கூட்டியே நியமனம் செய்து அவர்களின் பட்டியலை அந்தந்த தாலுகாவின் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.


அதன்படி அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் சட்டசபை தொகுதியில் உள்ள 306 வாக்குச்சாவடிகளுக்கான முகவர்கள் மற்றும் மாற்று முகவர்கள் 612 பேர் அடங்கிய பட்டியல் நேற்று தரங்கம்பாடி தாசில்தாரும், தேர்தல் நடத்தும் துணை அலுவலருமான சுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நிர்வாகிகள்

இதில் நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜகுமார் ஒப்படைத்தார். அப்போது காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் உத்தமன், வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், வேணுகோபால், நகர தலைவர் சம்பந்தம், எஸ்.சி. பிரிவு தலைவர் மதிவாணன், மாவட்ட பிரதிநிதி மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மனநலம் பாதிக்கப்பட்டதால் மாயம் பீகார் வாலிபர், 5 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதிக்கப்பட்டதால் மாயமான பீகார் வாலிபர் சென்னை காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு குணம் அடைந்ததை அடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
2. காரியாபட்டி அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு
காரியாபட்டி அருகே கொத்தடி தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
3. தங்கத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு: காஞ்சீபுரம் கோவில் சிலைகள், கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
தங்கத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஞ்சீபுரம் கோவில் சிலைகள் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.
4. செஞ்சி மல்லிநாதர் கோவிலில் கடத்தப்பட்ட 8 ஐம்பொன் சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
செஞ்சி மல்லிநாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்ட 8 ஐம்பொன் சிலைகள் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கின் விசாரணை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...