நாகர்கோவில் வட்டவிளையில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்


நாகர்கோவில் வட்டவிளையில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 1 Jan 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வட்ட விளையில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரி களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பீச்ரோடு வலம்புரிவிளையில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளில் இருந்து உரு வாகும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் குப்பை கிடங்கை உடனே இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு இருக் கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. குப்பைகளை உரமாக்கும் பணிகள் தொடங்கப்பட் டவுடன் இங்கிருக்கும் குப்பைகள் பாதியாக குறைந்து விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. மேலும் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை 11 இடங்களில் சேகரித்து பின்னர் அவற்றை உரமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் வட்டவிளையும் ஒன்று. ஆனால் வட்டவிளையில் குப்பை கிடங்கு அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கிறார்கள்.

எனவே வட்டவிளையில் குப்பை கிடங்கு அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் வட்டவிளையை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு நகர்நல அதிகாரி கின்ஷால் தலைமை தாங்கினார். என்ஜினீயர் பாலசுப்பிரமணி யன், சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர்நல அதிகாரி கின்ஷால் பேசியபோது, “நாகர்கோவில் நகராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு போதுமான இட வசதி இல்லை. அதே சமயத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் குப்பைகளை கொட்ட வேண்டும். எனவே தான் குப்பைகளை கொட்ட 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்“ என்றார்.

ஆனாலும் வட்டவிளையில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் ஒத்துழைக் கவில்லை. மேலும் அதிகாரி களுடன் வாக்குவாதமும் செய்தார்கள். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குப்பை கிடங்கு அமைத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

Next Story