புத்தாண்டையொட்டி தஞ்சை கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டையொட்டி தஞ்சை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்,
2018-ம் ஆண்டு நிறைவடைந்து 2019-ம் ஆண்டு நேற்று பிறந்தது. இந்த புத்தாண்டை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் கொண்டாடினர். மேலும் புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நேற்று அதிகாலை முதலே கோவில்களில் குவிந்தனர். இதனால் கோவில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
தஞ்சை பெரியகோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புத்தாண்டையொட்டி பெருவுடையாருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அய்யப்பபக்தர்களின் கூட்டமும் அதிக அளவில் காணப்பட்டது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்தனர். நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மன் சன்னதியில் பூப்பந்தல் அலங்காரம் செய்யப்பட்டது. மாரியம்மன் வெள்ளி பாவாடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பில்லுக்காரத்தெரு ஜி.ஏ.கெனால் சாலையில் புதுஆற்றங்கரையோரத்தில் சக்தி முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாகநாத விநாயகர், முருகன், நாகநாதசாமி, நாகேஸ்வரிஅம்மன், விஷ்ணுதுர்க்கை, கருப்பண்ணசாமி, மதுரைவீரன், சனீஸ்வரன், ஜெயவீரமகாஆஞ்சநேயர் ஆகிய சாமிகளின் சன்னதிகளும் உள்ளன. புத்தாண்டையொட்டி சக்தி முனியாண்டவருக்கு ரூபாய் நோட்டு, நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மற்ற சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புபூஜை நடைபெற்றது.
தஞ்சையை அடுத்த வடவாறு பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் ராகவேந்திரருக்கு பால், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் புத்தாண்டையொட்டி தஞ்சை சாய்பாபா கோவில், பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோவில், மேலவீதி சங்கரநாராயணசாமி கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், பங்காருகாமாட்சி அம்மன்கோவில், மூலைஅனுமார் கோவில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன்கோவில், கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில், நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில், மானம்புச்சாவடி வெங்கடேச பெருமாள் கோவில், மும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story