வழிப்பறி செய்ய திட்டமிட்ட 3 பேர், அரிவாளுடன் கைது தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு


வழிப்பறி செய்ய திட்டமிட்ட 3 பேர், அரிவாளுடன் கைது தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Jan 2019 3:45 AM IST (Updated: 2 Jan 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 3 பேர், அரிவாளுடன் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். தஞ்சை வடவாறில் உள்ள ஆதிமாரியம்மன்கோவில் ரெயில்வே கேட் அருகே அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 5 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 3 பேரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பையை சேர்ந்த சுரேஷ் (வயத34), தஞ்சை வெள்ளாள தெருவை சேர்ந்த சுருட்டை சரவணன் (50), டவுன்கரம்பையை சேர்ந்த பிரேம்குமார் (31) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் கம்பு மற்றும் அரிவாள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இவர்கள் வழிப்பறி செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கலிவரதன், முத்துராஜா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story