வானவில் : டேப்லெட்டாக விரியும் செல்போன்
மடிக் கணினி கேள்விப்பட்டிருப்போம். மடித்து கொள்ளும் ஸ்மார்ட் போனைப் பற்றி அறிவீர்களா?
உலகின் முதல் மடங்கக்கூடிய செல்போனை உருவாக்கியுள்ளது ரொயோல் நிறுவனம். மொபைல் போன் மற்றும் டேப்லெட் இரண்டின் பயன்பாட்டை ஒரே கருவியில் கொண்டு வந்துள்ளனர்.
ஸ்மார்ட்போனில் சிறிய திரையில் பார்ப்பதற்கு அசவுகரியமாக இருக்கும். ஆனால் இந்த பிளெக்ஸ்பாய் எனப்படும் போனை தேவையான போது டேப்லெட் போல விரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். 0 முதல் 180 டிகிரி கோணம் வரை விரிக்க முடியும்.
விரிக்கப்பட்ட நிலையில் 7.8 அங்குல அளவுள்ள இதன் திரை அருமையான துல்லியத்தில், கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் நிறங்களில் படத்தை நமக்கு விருந்தாக்குகிறது.
தனித்தன்மையான வாட்டர் எனப்படும் இயங்குதளத்தில் செயல்படுகிறது. 20 மற்றும் 16 எம். பி. தரத்தில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மடித்த நிலையிலும் படமெடுக்கலாம். பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ளக் கூடிய இந்த மடிப்பு போன் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம்.
Related Tags :
Next Story