பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கக்கோரி சத்துணவு–அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கக்கோரி சத்துணவு–அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 2 Jan 2019 9:42 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் அனுமதியை மீறி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரியலூர்,


பொங்கல் போனசாக ரூ.500 தமிழக அரசு வழங்கக்கோரி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் அரியலூர் அண்ணாசிலை அருகே தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், போலீசார் அனுமதியை மீறி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கி பேசினார். வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் போனசாக ரூ.500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story