திருவாரூர் தொகுதியில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்


திருவாரூர் தொகுதியில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 3 Jan 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

திருவாரூர் தொகுதியில் வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அரசு அலுவலக கட்டிடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதுதல், விளம்பர பிரசுரங்கள்் ஒட்டுதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள், நடைபாதை ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கும் விதமாக எவ்வித விளம்பர தட்டிகள் வைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கட்டிடங்களில் சுவர் விளம்பரம் எழுதுதல், விளம்பர பிரசுரம் ஒட்டுதல் கூடாது. நகராட்சி எல்லைக்குட்படாத இதர பகுதிகளில் தனியார் கட்டிடங்களில், அதன்் உரிமையாளர்களின் அனுமதியுடன் சுவர் விளம்பரம் எழுதலாம். இந்த விளம்பரங்களுக்கான செலவுத்தொகை வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்த்து கொள்ளப்படும்.

இந்த நிலையில் திருவாரூர் நகரில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களின் சுவர்களில் அரசியல் கட்சிகள் வரைந்த சின்னங்கள் மற்றும் விளம்பரங்கள் நகராட்சியின் சார்பில் ஊழியர்கள் மூலம் அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை மீறி சுவர்களில் சின்னங்கள் எழுதுவது, விளம்பர தட்டிகள் வைத்தால். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story