மாவட்ட செய்திகள்

இருளில் மூழ்கிய கிராமத்திற்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு + "||" + In the dark, a young man in a Transformer attacked the light of the village and attacked the electricity

இருளில் மூழ்கிய கிராமத்திற்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு

இருளில் மூழ்கிய கிராமத்திற்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு
மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமத்துக்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அழகேந்திரன் (வயது 27). சம்பவத்தன்று அந்த கிராமத்தில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், கிராமம் இருளில் மூழ்கியது. இதனை பார்த்து வேதனை அடைந்த அழகேந்திரன் அதனை சரிசெய்ய கிராமத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) மீது ஏறினார். அப்போது அழகேந்திரன் மீது மின்சாரம் தாக்கியது. அப்போது மின்மாற்றியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகேந்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை அருகே கார் மோதி பெண் உள்பட 2 பேர் சாவு திருமணத்துக்கு வந்தபோது பரிதாபம்
தஞ்சை அருகே திருமணத்துக்கு வந்த பெண் உள்பட 2 பேர் கார் மோதி இறந்தனர்.
2. கணவர் தகராறு செய்ததால் மகள்களுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலை முயற்சி சிறுமி சாவு
கணவர் தகராறு செய்ததால் மகள்களுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தார்.
3. கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு மின் மோட்டாரை மேலே தூக்கிய போது பரிதாபம்
கடத்தூர் அருகே மின் மோட்டாரை மேலே தூக்கிய போது கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
4. குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் சாவு: நெல்லை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகு இறந்த பெண்ணின் உடல் நெல்லை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
5. கொள்முதல் நிலையத்திற்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயி சுருண்டு விழுந்து சாவு
திருக்குவளை அருகே அரசு கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை விற்பனை செய்ய வந்த விவசாயி சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.