மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வராது பி.ஆர்.பாண்டியன் பேட்டி


மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வராது பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 3 Jan 2019 4:00 AM IST (Updated: 3 Jan 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டம், லாலாபேட்டைக்கு நேற்று வந்த அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டைக்கு நேற்று வந்த அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதி போராட்டகளமாக மாறி வருகிறது.

மேலும் விவசாயிகள் வாழ்வதற்கு பயப்படும் நிலை உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வராது. அதற்கு பதிலாக கிருஷ்ணகிரி ராசிமணலில் தமிழக அரசு அணை கட்ட ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் மேகதாதுவில் அணை கட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக நாளை (இன்று)நடைபெற உள்ள போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம் என்றார். 

Next Story