திருவெறும்பூர் அருகே ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்


திருவெறும்பூர் அருகே ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 8:43 PM GMT)

திருவெறும்பூர் அருகே சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக் கான ஆயத்த பணிகள் நேற்று தொடங்கியது.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டதால் 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஊரின் பொது மந்தையில் நடத்தப்பட்டது.

ஆனால் தற்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி வேறு ஒரு இடத்தில் ஜல்லிகட்டு நடத்த முடிவு செய்பட்டு அதற்கான உத்தரவை ஊர் தெய்வமான “நற்கடல்குடி கருப்பண்ணசாமி” என்கிற தெய்வத்திடம் சூரியூர் பொதுமக்கள் உத்தரவு கேட்டனர். இதில் சூரியூர் அருகே உள்ள சங்கிலி கருப்பு பெரியகுளத்தில் நடத்த உத்தரவு தெய்வ அருளால் பெறப்பட்டுள்ளது என அவ்வூர் மக்கள் கூறினர்.

அதன்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சூரியூரில் நடத்தப்படும் ஜல்லிகட்டு தான் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் காளைகளை தயார் செய்யும் விதமாக ஜல்லிகட்டு காளைகளுக்கு மாட்டின் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண்குத்்தும் பயிற்சி மற்றும் குப்பைகளில் பாயும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து சூரியூர் ஜல்லிகட்டுக்குழு நிர்வாகி ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பேரிகாடு மற்றும் மேடைகள் இரும்பு கம்பிகளால் அமைக்கப்படுகிறது. அதே போல் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை பாதுகாப்புடன் கண்டுகளிக்கும் விதத்தில் 8 அடுக்கு கேலரிகள் இரண்டு புறமும் தலா 100 அடி தூரத்திற்கு அமைக்கப்படும். இதில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங் களை சேர்ந்த 600 முதல் ஆயிரம் ஜல்லிக்கட்டு களைகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மாடுபிடி வீரர்களும் 600 முதல் 700 பேர் வரை கலந்துகொள்வார் கள். இதில் வெற்றிப்பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மோட்டார்சைக்கிள், பிரிட்ஜ், சைக்கிள், தங்ககாசு, வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர் களுக்கு டோக் கன் வழங்கு வதற்கு பதிலாக காலங்காலமாக கடை பிடிக்கப்பட்டு வரும் பாரம் பரிய முறையான வெற்றிலை, பாக்கு வைத்து, காளைகளை அழைக் கும்முறை கடைபிடிக்க இந்த ஆண்டு முதல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story