சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:00 AM IST (Updated: 3 Jan 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி,

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சவுரிமுத்து தலைமை தாங்கினார். அனைத்துத்துறை ஓய்வூதிய சங்க மாவட்ட பொருளாளர் புருஷோத்தமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் சின்னசாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் செந்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் செல்வராசு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில செயலாளர் தங்கவேல் சிறப்புரையாற்றினார். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850-ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில், மாவட்ட பொருளாளர் கல்யாணி நன்றி கூறினார். 

Next Story