அன்னவாசல் அருகே புயல் நிவாரண பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


அன்னவாசல் அருகே புயல் நிவாரண பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே புயல் நிவாரண பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் புயல் நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிப்பு அடையாத பெரும்பாலான குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது என்றும், வருவாய்த்துறையினர் முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் கூறி அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் வீரப்பட்டி பஸ் நிறுத்தம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் புதுக்கோட்டை- விராலிமலை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story